×

திருவண்ணாமலை தீபத் திருவிழா முன்னிட்டு அன்னதானம் வழங்க அனுமதி ஆணை

*கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க விண்ணப்பித்தவர்களுக்கு அதற்கான அனுமதி ஆணையை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க ஆன்லைனில் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அன்னதானம் வழங்க விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.
அப்போது, அன்னதானம் வழங்குவதற்கான ஆணையை வழங்கி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

தரமான உணவுப் பொருட்களை கொண்டு உணவு வழங்கினால் தான் மனம் மற்றும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அன்னதானம் வழங்குவதற்கு ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.தண்ணீர் வழங்குவதற்கும் ஒரு முறை பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, வாழை இலை, பாக்குமட்டை, மந்தாரை இலை பயன்படுத்த வேண்டும்.பக்தர்களின் தேவை அறிந்து உணவை வழங்க வேண்டும். அப்போதுதான், உணவு வீணாகாமல் முழுமையாக பயன்படுத்தப்படும்.

எனவே, அன்னதானம் வழங்கும் இடத்தில், குப்பை கழிவுகளை முறையாக குவித்து வைத்தால், நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் சுத்தம் செய்து கொள்ளலாம். மேலும், உணவை கவனமாக சமைக்க வேண்டும். உணவு சமைப்பதற்கு தூய்மையான தண்ணீரை பயன்படுத்தவும். மேலும், உணவை தூய்மையாகவும், தரமான பொருட்களை கொண்டும் சமைத்து வழங்க வேண்டும். உணவில் நிறமிகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அன்னதானத்தின் போது பயன்படுத்தினால், அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அன்னதானம் வழங்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

உணவு பாதுகாப்பு துறை மூலம் அன்னதானத்தின் தரம் முறையாக பரிசோதிக்கப்படும். சமைத்த உணவை கண்ணாடி பாத்திரத்தில் சிறிது மாதிரிக்கு எடுத்துக் வைத்துக்கொள்ள வேண்டும். இவர் அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மாநில கூடுதல் ஆணையாளர் (உணவு பாதுகாப்புத்துறை) தேவபிரசாத், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post திருவண்ணாமலை தீபத் திருவிழா முன்னிட்டு அன்னதானம் வழங்க அனுமதி ஆணை appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Deepa festival ,Collector ,Bhaskara Pandian ,Tiruvannamalai ,Tiruvannamalai Karthikai Deepa festival ,
× RELATED மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோர்...