×

பாலஸ்தீன ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலை வலியுறுத்தி ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றம்

ஐநா: கிழக்கு ஜெருசலேம் உள்பட 1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதியில் இருந்து இஸ்ரேலை திரும்ப பெற கோரி ஐநா பொது சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கடந்த 1967 முதல் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. அதே போல் சிரியாவின் கோலன் குன்றுகள் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில்,பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதியான தீர்வு காண வலியுறுத்தி செனகல் நாடு ஐநா பொது சபையில் தீர்மானம் நேற்றுமுன்தினம் கொண்டு வந்தது. ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் அடிப்படையில் மேற்கு ஆசியாவில் ஒரு விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை தாமதமின்றி அடைய வேண்டும்.கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட 1967 ல் முதல் நடத்தப்பட்ட இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது.

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் உட்பட பாலஸ்தீனப் பகுதியிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும். சர்வதேச சட்டத்தின்படி, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளின் தீர்வுக்கு, 1967-க்கு முந்தைய எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் அமைதி மற்றும் பாதுகாப்பில் அருகருகே வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். பாலஸ்தீனத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக காசா பகுதி உள்ளது. காசா பகுதியை பாலஸ்தீனிய அரசின் ஒரு பகுதியாகக் கொண்டு இரு நாடுகளின் தீர்வின் அடிப்படையில் காசாவை பாலஸ்தீனத்தின் கீழ் காசா அமைய வேண்டும்,சிரியாவின் கோலன் பகுதியில் இருந்து இஸ்ரேல் விலக கோரி தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்பட 157 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அர்ஜென்டினா,ஹங்கேரி, இஸ்ரேல் உள்ளிட்ட 8 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.7 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.

 

The post பாலஸ்தீன ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலை வலியுறுத்தி ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : UN ,Israel ,Palestine ,India ,UN General Assembly ,East Jerusalem ,
× RELATED இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர்...