×

கார்த்திகை மாதம் சுபமுகூர்த்த தினம் நாளை கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு: பதிவுத்துறை அறிவிப்பு

சென்னை: கார்த்திகை மாத சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் நாளை கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவண பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.

அந்தவகையில் கார்த்திகை மாதத்தின் சுபமுகூர்த்த தினமான நாளை அதிகளவில் பத்திர பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அதனடிப்படையில், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கார்த்திகை மாதம் சுபமுகூர்த்த தினம் நாளை கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு: பதிவுத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kartika ,CHENNAI ,Karthikai ,Dinesh Oliver ,
× RELATED கார்த்திகை மாதமும் அதன் சிறப்புகளும்