- மதுராந்தகம்
- சட்டமன்ற உறுப்பினர்
- மரக்காட்டியம் குமாரவேல்
- மதுராந்தகம்
- மதுராந்தகம்
- செங்கல்பட்டு மாவட்டம்
- பென்ஜால்
- மதுராடகம்
- தின மலர்
மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருளர்களுக்கு நிவாரண பொருட்களை, மரகதம் குமரவேல் எம்எல்ஏ வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெஞ்சல் புயல் மழை காரணமாக பலத்த காற்றுடன் 20 சென்டிமீட்டர் அளவிற்கு கனமழை கொட்டியது. இதனால் புதுப்பட்டு, நெல்வாய் கிராமங்களில் நீர்நிலை பகுதிகளில் குடியிருந்த 300க்கும் மேற்பட்ட இருளர் இன மக்களுக்கும், பொதுமக்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கும், பொதுமக்களுக்கும் அரிசி, மளிகை பொருள், காய்கறிகள், வேட்டி சேலை, பெட்சிட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வின்போது மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரன், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
The post மதுராந்தகம் பகுதிகளில் மழையால் பாதித்த இருளர்குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்: எம்எல்ஏ மரகதம் குமரவேல் வழங்கினார் appeared first on Dinakaran.