×

கால்வாயில் விழுந்த மூதாட்டி பலி

பெரம்பூர்: புளியந்தோப்பு எம்.எஸ். முத்து நகர் மசூதி பின்புறம் உள்ள பின்னி கால்வாயில் பெண் சடலமாக கிடப்பதாக புளியந்தோப்பு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வண்ணாரப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உதவியுடன், கால்வாயில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், புளியந்தோப்பு கன்னிகாபுரம் வெங்கடேசபுரம் புதிய காலனியை சேர்ந்த மங்கள லட்சுமி (65) என்பதும், கணவர் பாலசுந்தரம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதும்,

நிர்மலா தேவி என்ற மகளும் யோகானந்தம் என்ற மகனும் இருப்பதும், தற்போது இறந்து போன மங்கள லட்சுமி அவரது பேரன் கருணாகரன் என்பவருடன் வசித்து வந்ததும் தெரிந்தது. நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் சிறுநீர் கழிக்க கால்வாய் ஓரமாக ஒதுங்கிய போது கால் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கால்வாயில் விழுந்த மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Perambur ,Tamarindo MS. ,Pulyantopp ,Pinni Canal ,Muthu Nagar Mosque ,Vannarpet ,
× RELATED கால்வாயில் விழுந்த மூதாட்டி பலி