×

உப்பு கார உருண்டை

தேவையானவை:

கடலைப்பருப்பு-அரை கப்,
துவரம்பருப்பு-அரை கப்,
பாசிப்பருப்பு-கால் கப்,
காய்ந்த மிளகாய்-2,
புளி-நெல்லிக்காய் அளவு,
வெல்லத்தூள் (விருப்பப்பட்டால்)-ஒருடேபிள்ஸ்பூன்,
மல்லித்தழை (பொடியாக நறுக்கியது)-ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய் துருவல்-ஒருடேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது)-ஒரு டேபிள்ஸ்பூன்.

தாளிக்க:

கடுகு-அரை டீஸ்பூன்,
எண்ணெய்-3 டீஸ்பூன்

செய்முறை:

பருப்புகளை ஒன்றாக ஊறவைத்து மிளகாய், புளி, வெல்லம், உப்பு, தேங்காய் சேர்த்துகரகரப்பாக அரைத்தெடுங்கள். இதனை இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வைத்துவேகவைத்தெடுங்கள். ஆறியதும் உதிர்த்து விடுங்கள். அத்துடன் கடுகைத் தாளித்துச் சேருங்கள்.நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து சிறுசிறு உருண்டைகளாக அழுத்திப்பிடியுங்கள். உப்பு, புளிப்பு, காரம், இனிப்பு சேர்ந்த சூப்பர் உருண்டை இது.

 

The post உப்பு கார உருண்டை appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED காலமறிந்து களம் காணும் மகரம்