×

கோதுமை கேக்

தேவையானவை:

கோதுமை மாவு – 1 கிலோ,
கடலை மாவு – 100 கிராம்,
நெய் – ¾ கிலோ,
வெல்லம் – ½ கிலோ.

செய்முறை:

ஒரு அகலமானப் பாத்திரத்தில் நெய் முழுவதையும் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நெய் காய்ந்ததும் கோதுமை மாவு, கடலைமாவு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு மிதமான தீயில் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும். கோதுமை மாவு பொன்னிறமாக வெந்ததும் வெல்லத்தை தட்டிப் போடவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து பதமாக வந்ததும் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி கேக்குகளாக வெட்டவும்.

The post கோதுமை கேக் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சத்துமாவு கேக்