- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
- சென்னை
- வளம்
- மேலாண்மை
- அமைச்சர்
- கயல்விழி செல்வராஜ்
- உதயம்
- தின மலர்
சென்னை: தமிழக மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை:
சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பதிவு செய்வதற்கான ‘உத்யம்’ தளத்தில், 2021-22ம் ஆண்டில் 1,27,316 பேரும் 2022-23ம் ஆண்டில் 2,01,715 பேரும் 2023-24ம் ஆண்டில் 2,93,342 பேரும் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் மொத்தமாக கடந்த மூன்றாண்டுகளில் 6,22,373 பெண் தொழில் முனைவோர்களின் நிறுவனங்களைப் பதிவுசெய்து இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தைப் பெற்று தமிழ்நாடு சாதனைப் படைத்துள்ளது.
‘மகளிர் விடியல் பயணம்’ ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, ‘புதுமைப் பெண்’ போன்ற மகளிருக்கான திட்டங்களின் வழியில் பெண் தொழில் முனைவோருக்கான சிறப்பு நடவடிக்கைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்குத் தொடர்ந்து தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகள்; புத்தொழிலை ஊக்குவிப்பதற்கான மானியத்துடன் கூடிய ‘TANSEED’ திட்டத்தின் கீழ் பெண் தொழில் முனைவோருக்குச் சிறப்புத் தொகுப்புகள் போன்ற பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு நடவடிக்கைகளால் இச்சாதனை சாத்தியப்பட்டிருக்கிறது.
The post பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதில் தமிழ்நாடு இரண்டாவது இடம்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல் appeared first on Dinakaran.