×

விக்கிரவாண்டி மார்க்கெட் கமிட்டியில் வெள்ளம் புகுந்தது: ரூ.2.50 கோடி விளைபொருட்கள் சேதம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள் புகுந்த வெள்ள நீரால் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ₹2.50 கோடி மதிப்பிலான விளைபொருட்கள் சேதமடைந்தன. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்த மணிலா, எள், உளுந்து மூட்டைகள் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

நேற்று பிற்பகல் மாலை விற்பனை கூடத்திற்குள் மழை வெள்ளம் புகுந்ததில் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த எள், உளுந்து உள்ளிட்ட விளைபொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி சேதமானது. மணிலா மூட்டைகள் மழை வெள்ளத்தில் மிதந்து வெளியே வந்தன. இந்நிலையில் நேற்று இரவு விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனூர் ஏரி உடைந்து வெள்ளநீர் ஊருக்குள் புகுந்து கிராமத்தில் உள்ள சுமார் 200 வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

The post விக்கிரவாண்டி மார்க்கெட் கமிட்டியில் வெள்ளம் புகுந்தது: ரூ.2.50 கோடி விளைபொருட்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Vikravandi Market Committee ,Vikravandi ,Vikravandi Regulation Hall ,Dinakaran ,
× RELATED மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்று...