×

பூந்தமல்லியில் ஐயப்ப பூஜை

பூந்தமல்லி: மணிகண்ட ஐயப்ப யாத்திரை குழு சார்பில் 2ம் ஆண்டு ஐயப்பன் ஆத்ம பிரியனுக்கு அஷ்டபிஷேக பூஜைகள் நடைபெற்றது.  கார்த்திகை மாதம் ஏராளமான பக்தர்கள் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வார்கள். அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் பூந்தமல்லி அதன் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஸ்ரீ மணிகண்ட ஐயப்ப யாத்திரை குழு சார்பில் 2ம் ஆண்டு ஐயப்பன் ஸ்ரீ ஆத்ம பிரியனுக்கு நேற்றுமுன்தினம் அஷ்டபிஷேக பூஜைகள் நடந்தது. இதில் சபரிமலையில் உள்ள ஐயப்பனை போன்று ஐயப்பன் சிலை வைத்து நெய், பால், சந்தனம், விபூதி, சொர்ணம், பன்னீர், இளநீர், கலச அபிஷேகம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், 10 கிலோ அளவுக்கு துளசி, ரோஜா, சம்பங்கி மற்றும் சாமந்தி உள்ளிட்ட பல்வேறு மலர்களால் அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையடுத்து ஐயப்பன், விநாயகர், முருகப்பெருமான், சிவன், பெருமாள் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் பஜனை பாடல்களை பாடினர். பின்னர் சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் சபரிமலையில் இருப்பது போன்று ஐயப்பன் சிலைக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பன் பாடலை பாடி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஹரி குருசாமி மற்றும் ஸ்ரீ மணிகண்ட ஐயப்பன் யாத்திரை குழு மதன் குருசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பூந்தமல்லியில் ஐயப்ப பூஜை appeared first on Dinakaran.

Tags : Ayyappa ,Manikanda Ayyappa Pilgrimage Committee ,Ashtabhisheka ,Ayyappan ,Atma ,Priyan ,Karthika ,Sabarimala ,Ayyappa Swamy ,Ayyappa Puja ,
× RELATED சுவாமி சரணம் ஐயப்பா!!