×

ஆலந்தூர் 156வது வார்டில் மரக்கிளைகளை அகற்ற வலியுறுத்தல்

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் 12வது மண்டலம், 156வது வார்டான முகலிவாக்கம், கிருஷ்ணகிரி நகர், வடக்கு தெருவில் பெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்குள்ள மரக்கிளைகள் வெட்டப்பட்டு, சாலையிலேயே மொத்தமாக குவித்து வைக்கப்பட்டு உள்ளன. தற்போது புயல் மற்றும் கனமழை கடந்து சென்ற பிறகும், இங்கு வெட்டப்பட்ட மரக்கிளை கழிவுகள் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் அப்பகுதி சாலையில் குப்பை கழிவுகள் போல் சிதறி கிடக்கின்றன.

இக்குப்பைக் கழிவுகளால் அப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகரித்து, பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அப்பகுதி மக்கள் பல்வேறு மர்ம காய்ச்சல் மற்றும் நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை நீடிக்கிறது. இதுகுறித்து வார்டு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அவற்றை அகற்றுவதில் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. எனவே, 156வது வார்டு பகுதிகளில் தேங்கியுள்ள மரக்கிளை கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி நலச்சங்க நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர்.

The post ஆலந்தூர் 156வது வார்டில் மரக்கிளைகளை அகற்ற வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Alandur 156th Ward ,ALANTHUR ,North Street ,Mughalivakkam ,Krishnagiri Nagar ,156th Ward ,12th Zone ,Chennai Corporation ,Alandur ,Dinakaran ,
× RELATED கல்குட்டையில் தவறி விழுந்த பிளம்பர் பலி