×

கழுதை தலையை துண்டித்து எடுத்து சென்ற மர்ம நபர்கள்

ஓசூர், டிச.2: ஓசூர் அருகே கறுப்பு நிற கழுதையின் தலையை துண்டித்து எடுத்து சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூனியம் செய்ய அவ்வாறு எடுத்து சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கொத்தக்கொண்ட பள்ளியை சேர்ந்தவர் ஆனந்தன் (43). சலவை தொழிலாளி. இவர் 20 கழுதைகளை வளர்த்து ெதாழிலுக்கு உதவியாக வைத்துள்ளார்.

மேலும் அதே பகுதியில் இஸ்திரி போட்டு வருகிறார். இவரது கழுதை கொட்டகைக்கும், தங்கி உள்ள வீட்டிற்கும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் உள்ளது. நேற்று அதிகாலை கழுதைகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக கொட்டகைக்கு சென்றார். அப்போது, அங்கு ஒரு கறுப்பு நிற கழுதையின் தலை துண்டிக்கப்பட்டு, உடல் மட்டும் கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஆனந்தன், இது குறித்து மத்திகிரி போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அமாவாசை தினத்தை முன்னிட்டு, கருப்பு நிறமுள்ள கழுதையின் கழுத்தை மர்மநபர்கள் வெட்டி அறுத்து சென்றுள்ளனர். இதை வைத்து சூனியம் வைக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே கழுதையில் தலையை வெட்டிய நபர்களை கண்டுபிடித்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார். இந்த சம்பவத்தால் ஓசூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post கழுதை தலையை துண்டித்து எடுத்து சென்ற மர்ம நபர்கள் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Krishnagiri District ,
× RELATED ஓசூர் பகுதியில் நாய் தொல்லை இரவு நேர...