×

ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம்

ஓசூர், டிச.16: ஓசூர் அருகே டி.கொத்தப்பள்ளியில் விவசாயியை ஒற்றை யானை தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒற்றை யானை நடமாட்டத்தால் கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த யானை கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை, கடந்த 2 தினங்களுக்கு முன்பு டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இந்த யானையை, வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு சானமாவு வனப்பகுதிக்கு விரட்டினர். இதனையடுத்து நேற்று காலை மீண்டும் ஒற்றை யானை டி.கொத்தப்பள்ளிக்கு திரும்பி வந்து பயிர்களை சேதப்படுத்தியது. அப்போது, அங்கிருந்த விவசாயி ஏங்கப்பா (50) என்பவரை யானை தாக்கியதில் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்ன,ர் வனத்துறையினர் வந்து ஒற்றை யானையை சானமாவு வனப்பகுதிக்கு விரட்டினர். ஒற்றை யானை நடமாட்டத்தால் சானமாவு, பீர்ஜேப்பள்ளி, சினிகிரிப்பள்ளி, ராமாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Hosur ,D. Kothapalli ,Chanamavu forest ,Krishnagiri ,
× RELATED ஓசூர் பகுதியில் நாய் தொல்லை இரவு நேர...