×

ஊத்தங்கரை அருகே பிளஸ் 2 மாணவன் மாயம்

ஊத்தங்கரை, டிச.16: ஊத்தங்கரையை அடுத்த ஆட்டுக்காரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் தருண்(17). இவர், அரூர் அருகே உள்ள ராமியம்பட்டி கிராமத்தில் உள்ள, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 12ம் தேதி காலை, வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்வதாக கூறிச் சென்றவர், மாலை வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தாய் உஷா ஊத்தங்கரை போலீசில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஊத்தங்கரை அருகே பிளஸ் 2 மாணவன் மாயம் appeared first on Dinakaran.

Tags : Uthankarai ,Sakthivel ,Tarun ,Attukkaranan Kottai ,Government Boys' Higher Secondary School ,Ramiyampatti ,Aroor ,Dinakaran ,
× RELATED ஊத்தங்கரை வழியாக கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு