×

திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

 

ஒட்டன்சத்திரம், டிச. 2: ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனையின் பேரில், இடைய கோட்டை, வலையபட்டி, ஜோகி பட்டி, புலியூர் நத்தம், புளியமரத்து கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டன்சத்திரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர், மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி கே.மணி தலைமையில், வடக்கு ஒன்றிய செயலாளர்ஜோதீஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2026 தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது, தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்வது உள்ளட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் செல்லமுத்து, ஒன்றிய பொருளாளர் அழகியண்ணன், ஒன்றிய பெருந்தலைவர் அய்யம்மாள், கூட்டுறவு சங்கத் தலைவர்செல்வராஜ்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருகானந்தம், ஒன்றிய துணை செயலாளர் ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்றதலைவர்கள்சுப்பிரமணி, சரவணன்,தங்கராஜ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பிரபு, ஷாஜஹான், ஒன்றி யஇளைஞரணி துணை அமைப்பாளர் சாகூல்அமீது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

The post திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK Party ,Agents ,Othanchatram ,Ottanchatram North Union ,Minister ,A. Chakrapani ,Ottanchatram Constituency ,Adiya Fort ,Valayapatti ,Jogi Patti ,Puliyur Natham ,Puliyamarattu Fort ,DMK Constituent Agents ,Dinakaran ,
× RELATED எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்