- திருச்செந்தூர் கோவில் ஹோட்டல் கட்டணம்
- திருச்செந்தூர்
- கார்த்திகை
- சபரிமலை
- திருச்செந்தூர் சுப்ரமணி
- சுவாமி கோயில்
- திருக்கோயில் யாத்திரி நிவாஸ்
- திருச்செந்தூர் கோயில்
- கட்டணம்
திருச்செந்தூர்: கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு தரிசனம் செல்கின்ற பக்தர்களும், தரிசனம் முடிந்து வருகின்ற பக்தர்களும் அதிக அளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், திருக்கோயில் யாத்ரி நிவாஸ் விடுதியில் தற்போது வாடகை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இருவர் தங்கும் அறைகள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ரூ.1,800ல் இருந்து ரூ.1,600, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.2000ல் இருந்து ரூ.1,800, விழா நாட்களில் ரூ.2400ல் இருந்து ரூ.2,200 என குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல 7 கட்டில்கள் கொண்ட டார்மட்ரி அறைகள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ரூ.3,500ல் இருந்து ரூ. 3000, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.4,200ல் இருந்து ரூ. 3800, விழா நாட்களில் ரூ.4,500ல் இருந்து ரூ.4200 எனவும், 9 படுக்கைகள் கொண்ட டார்மட்ரி ஹால் ரூ.500 குறைக்கப்பட்டு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை ரூ.4000ம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ரூ.4500ம், முக்கிய விழா நாட்களில் ரூ.5000ம் எனவும் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post திருச்செந்தூர் கோயில் விடுதி கட்டணம் குறைப்பு appeared first on Dinakaran.