×
Saravana Stores

உளுந்து வயல்களில் வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

*மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தும் முறைகளை விளக்கினர்

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் காரணமாக உளுந்து பயிரிட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்ட செய்தி தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது இதனைத் தொடர்ந்து நேற்று உளுந்தூர்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பொறுப்பு கிருபாகரன் விவசாய நிலங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: வறட்சி மற்றும் மழை பற்றாக்குறை காரணத்தால் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குததால் அதிக அளவில் உள்ள உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு தென்படுகிறது. இந்த நோய் தாக்குதல் அதிகரித்தால் 50 முதல் 70 சதவீதம் வரை மகசூல் குறைய வாய்ப்புள்ளது. வெள்ளை ஈ என்ற பூச்சி மூலம் இந்த நோய் பரவுகிறது. உளுந்து மஞ்சள் சோகை நச்சுயிரி தாக்கப்பட்ட பயிா்களை ஆரம்பத்திலேயே களைதல் வேண்டும்.

வெள்ளை ஈக்கள் நடமாட்டத்தினை கண்காணிக்க மஞ்சள் நிறம் பூசப்பட்ட டப்பாக்களில் விளக்கெண்ணெய் தடவி ஏக்கருக்கு ஐந்து என்ற அளவில் பயிர் மட்டத்தில் குச்சிகளில் கவிழ்த்து வைக்க வேண்டும். இந்நோயை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு அசிட்டாமிபிரிட் 20 ஷிறி @ 100 கிராம் (அல்லது)தயாமீதாக்ஷம் 25 கீஞிநி @ 70 கிராம் (அல்லது) இமிடாகுளோபிரிட் 17.8 ஷிலி @ 100 மி.லி என்ற பூச்சிக்கொல்லியினை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

மருந்துக் கரைசல் பயிரின் பாகங்களில் நன்கு பரவிப் படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளான சாண்டோவிட், இன்ட்ரான் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் 15 நாள் கழித்து மற்றொரு முறை இந்த மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளித்து நோயை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆர்ஆர் குப்பம் கிராமத்தில் ஜெயபால் என்ற விவசாயி வயலில் கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தம் முறைகள் குறித்து விளக்கினார். அப்போது துணை வேளாண்மை அலுவலர் பழனிவேல், வேளாண் உதவி பொறியாளர் அறவாழி, இயற்கை முன்னோடி விவசாயி முத்துசாமி, கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post உளுந்து வயல்களில் வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Agriculture Department ,Ulundurpet ,
× RELATED விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்