×

நடித்தல் போட்டியில் உடுமலை மாணவிகள் சாதனை

 

உடுமலை, நவ.30: மாநிலக்கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மக்கள் தொகை மற்றும் வளரிளம் பருவத்தினர் பங்கேற்று நடித்தல் போட்டிகள் மாநில அளவில் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. மாநில அளவில் 36 மாவட்டங்கள் கலந்து கொண்டன.

முதல் பரிசு கோவை மாவட்டமும், இரண்டாம் பரிசு திருப்பூர் மாவட்டமும், மூன்றாம் பரிசு தென்காசி மாவட்டமும் பெற்றுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரண்டாம் பரிசு பெற்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கு பயிற்சி அளித்து போட்டிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் விஜயலட்சுமிக்கும், மாணவிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

The post நடித்தல் போட்டியில் உடுமலை மாணவிகள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Udumalai ,State Institute of Education and Research ,Kongunadu Engineering College ,Thaniyam, Trichy District ,Dinakaran ,
× RELATED மாநில அளவிலான எறிபந்து போட்டியில் திருவேங்கடம் கலைவாணி பள்ளி சாதனை