திருப்பூர், டிச.25: திருப்பூர், வீரபாண்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, மீனாம்பாறை ரோட்டில் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள், பீகாரை சேர்ந்த அஜய்குமார் (20), ராஜீவ்குமார் (29), என்பதும் அவர்கள் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
The post கஞ்சா விற்ற வடமாநில வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.