- திருவேங்கடம் கலைவாணி பள்ளி
- திருவேங்கடம்
- - நிலை
- பாரதியார் தின குழு விளையாட்டு போட்டி
- தமிழ்நாடு அரசு
- கொங்குநாடு பொறியியல் கல்லூரி
- தொட்டியம், திருச்சி மாவட்டம்
- தின மலர்
திருவேங்கடம், டிச.24: தமிழக அரசு சார்பில் நடைபெற்ற 40வது மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இதில் 38 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து மாணவிகள் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எறிபந்து போட்டியில் சூப்பர் சீனியர் பிரிவில் மூன்றாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி முதல்வரும் நிர்வாகியுமான பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
The post மாநில அளவிலான எறிபந்து போட்டியில் திருவேங்கடம் கலைவாணி பள்ளி சாதனை appeared first on Dinakaran.