×
Saravana Stores

புயல் இன்று கரையை கடப்பதால் கட்டுமான நிறுவனங்கள் கிரேன்களை பாதுகாப்பாக நிலைநிறுத்த வேண்டும்: விளம்பர போர்டுகளை இறக்கி வைக்க வேண்டும்; தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: புயல் இன்று கரையை கடப்பதால் கட்டுமான நிறுவனங்கள் பயன்படுத்தும் கிரேன்களை பாதுகாப்பாக நிலைநிறுத்த வேண்டும், விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: பெஞ்சல் புயல் இன்று (30ம் தேதி) கரையை கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, “அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமான தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதலோ அல்லது விழுவதாலோ, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, இதனை தவிர்க்க கிரேன்களை கீழே இறக்கி வைக்குமாறும் அல்லது உறுதியாக நிலைநிறுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், விளம்பர போர்டுகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களது விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்குமாறும் அல்லது புயல் காற்றினால் விளம்பர போர்டுகள் சாயவோ அல்லது விழாமலோ இருக்கும் வகையில் உறுதிபடுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post புயல் இன்று கரையை கடப்பதால் கட்டுமான நிறுவனங்கள் கிரேன்களை பாதுகாப்பாக நிலைநிறுத்த வேண்டும்: விளம்பர போர்டுகளை இறக்கி வைக்க வேண்டும்; தமிழக அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamilnadu government ,CHENNAI ,Tamil Nadu government ,Tamil Nadu State Disaster Management Authority ,Dinakaran ,
× RELATED மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க...