×

கும்பகோணம் அருகே தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து சேதம்

கும்பகோணம் : கும்பகோணம் அருகே பாபநாசம் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமானது. புதிதாக வீடு கட்டி தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்காவில் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அன்னப்பன்பேட்டை மேலமணவர்த்தி தெருவில் கூரை வீட்டில் வசித்து வருபவர் கமலா (45). நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர் கணவர் இறந்த நிலையில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் விவசாய கூலி வேலைக்காக சென்றுவிட்டு திரும்ப வந்து பார்க்கும்போது, பகல் முழுவதும் பெய்த மழையினால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கணவனை இழந்த நிலையில் பாதிக்கப்பட்ட கமலா சம்பந்தப்பட்ட வீட்டை ஆய்வு செய்து தன்னுடைய குடும்பத்திற்கு, அரசின் நிவாரண உதவியை வழங்கி புதிதாக வீடு கட்டி தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

The post கும்பகோணம் அருகே தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Papanasam ,Tamil Nadu government ,Thanjavur district ,Papanasam taluk ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் கோயிலில் இருந்து 1957ல்...