×

இஸ்கான் அமைப்பை தடை செய்ய வங்கதேச உயர்நீதிமன்றம் மறுப்பு

டாக்கா: வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பை தடை செய்வதற்கு உயர்நீ நீதிமன்றம் மறுத்து விட்டது. வங்க தேசத்தில் இஸ்கான் அமைப்பில் உறுப்பினராக இருந்த சின்மோய் கிருஷ்ணா தாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் அமைப்பில் இருந்து வௌியேற்றப்பட்டார். ஆனால் சம்மிலிதா சனாதானி ஜோட் என்ற இந்து அமைப்பின் செய்தி தொடர்பாளராக அவர் தொடர்ந்து வருகின்றார். இந்நிலையில் இந்து மத ஊர்வலத்தின்போது அந்நாட்டின் கொடி அவமதிக்கப்பட்ட குற்றச்சாட்டில் சின்மோயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின்போது நடந்த தாக்குதலில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வங்கதேசத்தில் செயல்படும் இஸ்கான் அமைப்பை தடை செய்யக்கோரி அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய பிரச்னைகளால் நாட்டை சீர்குலைக்க முயல்வதாகவும், இதற்கு காரணமாக இஸ்கான் அமைப்புக்கு நீதிமன்றம் தாமாக முன்வந்து தடை விதிக்க வேண்டும் என்றும், சட்டோகிராம், ராங்ப்பூர் மற்றும் தினஜ்பூரில் 144 தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைவிடுக்கப்பட்டு இருந்தது. அப்போது அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு நீதிமன்றம் கேட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல்கள், வழக்கறிஞர் கொலை, இஸ்கானின் நடவடிக்கைகள் தொடர்பான 3 தனித்தனி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்ட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். வங்கதேச மக்களின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை, பொதுமக்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நம்புவதாக தெரிவித்த நீதிமன்றம் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதால் இஸ்கான் அமைப்பை தடை செய்வதற்கு உத்தரவிடமுடியாது என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனிடையே வங்கதேச தலைமை நீதிபதி சையத் ரபாத் அகமத் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘உச்சநீதிமன்ற அறையில் நீதிபதியை தாக்க முயன்றது மற்றும் வழக்கறிஞர் கொல்லப்பட்டது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் மிகவும் கவலையடைய செய்துள்ளது. சவால்கள் இருந்தபோதிலும், நீதித்துறை செயல்முறைகள் தடையின்றி இருப்பதை உறுதிப்படுத்த அனைத்து செயல்பாடுகளும் தீவிரமாக கண்காணிப்படுகின்றன ” என்று கூறப்பட்டு உள்ளது.

The post இஸ்கான் அமைப்பை தடை செய்ய வங்கதேச உயர்நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Bangladesh High Court ,ISKCON ,Dhaka ,High Court ,Bangladesh ,Chinmoy Krishna Das ,Sammilita Sanathani Jot… ,Dinakaran ,
× RELATED வக்கீல்கள் யாரும் ஆஜராகாததால் இந்து...