×
Saravana Stores

மெட்ரோ ரயில் திட்டம்; தமிழகத்திற்கு நியாயமான நிதி கிடைக்கவில்லை: – வில்சன் எம்.பி., குற்றச்சாட்டு


சென்னை: தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-1, கட்டம்-1 விரிவாக்கம் மற்றும் கட்டம்-2 என மொத்தம் 173 கிமீ நீளமுள்ள மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ85,395 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதில் சென்னை மெட்ரோ கட்டம் -1 விரிவாக்கம் உட்பட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு ரூ15,355.78 கோடி முழுவதையும் விடுவித்துள்ளது என்று ஒன்றிய இணை அமைச்சர் சாஹூ பதில் அளித்துள்ளார்.

ஆனால், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ986.78 கோடி என்று அவரது எழுத்துப்பூர்வ பதிலில் இருந்து தெரியவந்திருக்கிறது. இதில் எந்த எண்ணிக்கை சரியானது? மேலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்தது குறித்தோ அல்லது பெரும் பற்றாக்குறைத் தொகை தமிழக அரசுக்கு எப்போது ஈடு செய்யப்படும் என்பது குறித்தோ மனோகர் லால் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ஒன்று மட்டும் நிச்சயம்; தமிழகத்திற்கு நியாயமான நிதி கிடைக்கவில்லை.

The post மெட்ரோ ரயில் திட்டம்; தமிழகத்திற்கு நியாயமான நிதி கிடைக்கவில்லை: – வில்சன் எம்.பி., குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Wilson ,Chennai ,DMK Rajya Sabha ,P. Wilson ,Metro Rail ,Dinakaran ,
× RELATED முக்கிய வழக்குகளில் ஆஜராகாத அரசு...