×

படகு கவிழ்ந்து சிக்கிய மீனவர்களை மீட்பதில் சிக்கல்..!!

கடலூர்: படகு கவிழ்ந்து சிக்கிய கடலூர் தைக்கால் தோணித்துறை கிராமத்தை சேர்ந்த 6 மீனவர்களை 2வது நாளாக மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தோணித்துறையை சேர்ந்த 6 மீனவர்கள் 2 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகில் நேற்று அதிகாலை கடலுக்கு சென்றனர். கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு கவிழ்ந்ததில் மீனவர்கள் மணி கண்ணன், தமிழ், சாமிதுரை, மணிமாறன், தினேஷ், சற்குணன் லேசான காயம் அடைந்தனர். சித்திரப்பேட்டை அருகே உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் இறங்குதளத்தில் ஏறி மீனவர்கள் உயிர் தப்பினர். மீனவர்கள் உள்ள இடத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் 2வது நாளாக அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றம் குறைந்த பின்னரே மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post படகு கவிழ்ந்து சிக்கிய மீனவர்களை மீட்பதில் சிக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Dohenitara ,Cudalur Tailkal ,Department of Horticulture ,Dinakaran ,
× RELATED கடலூரில் குப்பைகளை சரியாக அகற்றாத ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம்