×

வங்கதேசத்தில் சிறையில் இருக்கும் இந்து மத துறவியின் சீடர்கள் – போலீசார் மோதலில் வழக்கறிஞர் பலி: 30 பேர் கைது

டாக்கா: வங்கசேத்தில் இஸ்கான் அமைப்பில் உறுப்பினராக இருந்த சின்மோய் கிருஷ்ணா தாஸ் உறுப்பினராக கடந்த சில நாட்களுக்கு முன் அமைப்பில் இருந்து வௌியேற்றப்பட்டார். ஆனால் சம்மிலிதா சனாதானி ஜோட் என்ற இந்து அமைப்பின் செய்தி தொடர்பாளராக அவர் தொடர்ந்து பொறுப்பு வகித்து வருகின்றார். கடந்த 25ம் தேதி டாக்காவின் லால்டிகி மைதானத்தில் நடந்த இந்து மத ஊர்வலத்தின்போது வங்கதேச கொடி அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியாவின் ஆதரவாளர்கள் கோட்வாலி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் அடிப்படையில் சின்மோய் கிருஷ்ணதாஸ் மற்றும் 18 பேர் மீது போலீசார் தேசதுரோக வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து சின்மோய் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக சின்மோய் நேற்று முன்தினம் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் தர மறுத்துவிட்டது. இதனை கண்டித்து அவரது வழக்கறிஞர்கள், ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் அவரது அரசு வழக்கறிஞர் மற்றும் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் அரசு வழக்கறிஞர் சைபுல் இஸ்லாம் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து வழக்கறிஞர் கொலை தொடர்பான முதல்கட்ட விசாரணையில் அடிப்படையில் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐநா தலையிடக்கோரிக்கை
ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில், ‘‘வங்கதேசத்தில் இந்துக்களை குறிவைத்து, இந்து மத தலைவர் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. பாகிஸ்தானை போலவே வங்கதேச இடைக்கால அரசில் அடிப்படைவாதிகள் ஆதிக்கம் செலுத்துவதை இது காட்டுகின்றது. இதுபோன்ற தாக்குதல்கள் மனித குலத்திற்கு எதிரானது. இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

The post வங்கதேசத்தில் சிறையில் இருக்கும் இந்து மத துறவியின் சீடர்கள் – போலீசார் மோதலில் வழக்கறிஞர் பலி: 30 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Dhaka ,Chinmoy Krishna Das ,ISKCON ,Bengaluru ,Sammilita Sanathani ,Jot ,
× RELATED வக்கீல்கள் யாரும் ஆஜராகாததால் இந்து...