- பழவேற்காடு
- மீன்பிடி துறை
- பொன்னேரி
- பாலாவேக்காடு
- ஸ்ரீஹரிகோட்டா
- நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு
- இஸ்ரோ
- பலவர்குட்
- தின மலர்
பொன்னேரி: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி 59 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ப்ரோபா-3 எனப்படும் இரு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் புவியிலிருந்து 60,530 கிமீ தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி சூரியனை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி 59 ராக்கெட் இன்று மாலை 4.08 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கியது. ராக்கெட் ஏவும் காலங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட கடல் பகுதிக்குள் மீனவர்கள் தொழிலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி இன்று திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் யாரும், கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். புயல் காரணமாக ஏற்கனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் மேலும் 1 நாள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்லத் தடை: மீன்வளத்துறை உத்தரவு appeared first on Dinakaran.