சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2வது ஆட்டத்தை குகேஷ் டிரா செய்துள்ளார். நேற்று முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனுடன் தோல்வியுற்ற நிலையில் இன்று டிரா செய்தார். போட்டி தொடங்கி 23 ஆவது நகர்த்தலில் இருவரும் டிரா செய்ய ஒப்புக் கொண்டனர். மொத்தம் 14 போட்டிகளில் முதலில் 7.5 புள்ளிகளை எடுப்பவர் உலக சாம்பியன் பட்டம் வெல்வார். டிங் லிரென் 1.5 புள்ளிகளும், குகேஷ் 0.5 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.
The post உலக செஸ் சாம்பியன்ஷிப்: 2ஆவது போட்டி டிரா appeared first on Dinakaran.