×
Saravana Stores

காய்ச்சல் நோயாளிகளை ‘அட்மிட்’ செய்யும் போராட்டம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு

 

மதுரை, நவ. 26: மதுரை அரசு மருத்துவமனை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் நோயாளிகளை அட்மிட் செய்யும் போராட்டத்தை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சங்கத்தின் மாநிலதலைவர் டாக்டர் செந்தில், மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சீனிவாசன் அறிக்கை: கடந்த வாரம் மருத்துவக்கல்லூரி டீன்களுக்கான கள ஆய்வில் உயரதிகாரி ஒருவர், காய்ச்சல் கண்ட நோயாளி யாரும் இறந்தால், துறை மருத்துவர், டீன் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், காய்ச்சலில் வரும் நோயாளிகளை கட்டாயம் அட்மிட் செய்யவும் தெரிவித்துள்ளார்.

இதன்பேரில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் நவ.26 (இன்று) தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு வரும் காய்ச்சல் நோயாளிகள் அனைவரையும் உள்நோயாளிகளாக அட்மிட் செய்யும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. லேசான காய்ச்சலுடன் வருவோரையும் உள்நோயாளியாக அனுமதித்தால், நாளொன்றுக்கு 10ஆயிரம் பேரை அனுமதிக்க வேண்டும். எதார்த்தத்தை அதிகாரிகளுக்கு உணர்த்திட நடத்தும் இப்போராட்டத்தில் நோயாளிகளின் விருப்பத்திற்க எதிராக எந்த ஒரு நோயாளியும் அட்மிட் செய்யப்பட மாட்டார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காய்ச்சல் நோயாளிகளை ‘அட்மிட்’ செய்யும் போராட்டம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government Doctors Association ,Madurai ,Tamil Nadu ,Madurai Government Hospital ,president ,Dr. ,Senthil ,state general secretary ,
× RELATED மதுரை அரிட்டாபட்டியில் சுரங்கம்...