×
Saravana Stores

அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

மங்கலம்பேட்டை, நவ. 29: பண்ருட்டியில் இருந்து விருத்தாசலத்திற்கு ஆலடி வழியாக நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆலடி அடுத்த புதுப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே இரவு 10 மணியளவில் வந்து கொண்டிருந்த போது பேருந்தின் பின்புற கண்ணாடியை மர்ம நபர் கல்லை வீசி உடைத்துவிட்டு தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து அரசு பேருந்து ஓட்டுநர் காட்டுக்கூடலூரை சேர்ந்த அருணாச்சலம் மகன் மணிகண்டன்(46) கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, கல் வீசிய நபர் யார், எதற்காக கல் வீசினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Mangalampet ,Panruti ,Vridthachalam ,Alladi ,Puduppet ,Dinakaran ,
× RELATED வாங்கிய பணத்தை திருப்பி தர முடியாததால் ஏஜென்ட் தற்கொலை