- திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றம்
- திருவண்ணாமலை
- மகளிர் நீதிமன்றம்
- சுப்பிரமணி
- போளூர் சிவராஜ் நகர், திருவண்ணாமலை மாவட்டம்
- திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றம்
திருவண்ணாமலை, நவ.29: மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில், மனைவியின் அண்ணியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் கோர்ட் தீர்ப்பளித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சிவராஜ் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் பிச்சாண்டி(36). அவரது மனைவி லீனாமேரி(30). கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.
அதன்படி, கடந்த 1.6.2001 அன்று மனைவி லீனாமேரியிடம் பிச்சாண்டி தகராறு செய்துள்ளார். அதனால், மனம் உடைந்த லீனாமேரி, கணவரைப் பிரிந்து சந்தவாசல் கிராமத்தில் உள்ள தனது அண்ணன் அந்தோணிசாமி வீட்டுக்கு சென்றுள்ளார். தொடர்ந்து, சந்தவாசல் கிராமத்துக்கு சென்ற பிச்சாண்டி, மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் அவரது அண்ணன் மனைவி சகுந்தலா தான் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், சகுந்தலாவை சரமாரி கத்தியால் குத்தியுள்ளார். அதனால் படுகாயம் அடைந்த சகுந்தலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக, சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மகளிர் சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில், சிறப்பு குற்ற பொது வழக்கறிஞர் வீணாதேவி ஆஜரானார். வழக்கை விசாரித்த மகளிர் கோர்ட் சிறப்பு நீதிபதி சுஜாதா நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், பிச்சாண்டிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ₹5 ஆயிரம் அபராதமும் விதித்தார். தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிச்சாண்டியை, போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை திருவண்ணாமலை மகளிர் கோர்ட் தீர்ப்பு உறவினரை குத்தி கொல்ல முயற்சி appeared first on Dinakaran.