×

சங்கரன்கோவில் பள்ளியில் இலவச சைக்கிள்

சங்கரன்கோவில், நவ.26: சங்கரன்கோவில் என்ஜிஓ காலனியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஏவி மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் தலைமை வகித்தார் பள்ளிச்செயலர் ராஜகுரு, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், பள்ளி தலைமை ஆசிரியை பத்மா முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி கலந்துரையாடினார். விழாவில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால் மற்றும் ஜெயக்குமார், பாலாஜி, ஜான்சன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post சங்கரன்கோவில் பள்ளியில் இலவச சைக்கிள் appeared first on Dinakaran.

Tags : Sankaranko ,Sankarankovil ,AV High School ,NGO ,Colony ,Sankarankoil Union ,Lala Sankara Pandyan ,School Principal ,Rajaguru ,Sankarankoil… ,Sankarankoil ,Dinakaran ,
× RELATED சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகம்...