×

புயல் கடந்த நிலையிலும் வெள்ளத்தில் தத்தளிப்பு; பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருட்களுடன் நிவாரண உதவி: கடலூரில் துணை முதல்வர் வழங்கினார்

கடலூர், டிச. 4: கடலூரில் புயல் கடந்த நிலையிலும் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப்பெருக்கால் வெள்ளநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட துணை முதலமைச்சர் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவி வழங்கினார். கடலூரில் பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். இந்நிலையில் பெஞ்சல் புயலின் தாக்கத்தின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் வெள்ளநீர் நிரம்பி ஒரே நாளில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றும் நிலை ஏற்பட்டதால் கடலூர் பகுதியில் மீண்டும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

இதற்கிடையே கடலூர் மஞ்சக்குப்பம் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக சந்தித்து நிவாரண தொகுப்பை வழங்கி குறைகளை கேட்டறிந்தார்.இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப்சிங் பேடி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் அனு, துணை மேயர் தாமரைச்செல்வன், மண்டலக்குழு பிரசன்னா, சங்கீதா குமரன், இளையராஜா,

மாநகர திமுக செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் தனஞ்செயன், சுப்பிரமணியன், விஜயசுந்தரம், பகுதி செயலாளர் சலீம், நடராஜன், மாமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், செந்தில்குமாரி இளந்திரையன், சுபாஷினி ராஜா, பாலசுந்தர், சக்திவேல், திமுக நிர்வாகிகள் மருத்துவர் அணி அமைப்பாளர் பால கலைக்கோவன், மாநில செயற்குழு விக்ரமன், கார் வெங்கடேசன், ராஜராஜன், மாணவர் அணி பாலாஜி, தகவல் தொழில்நுட்பம் கார்த்தி, பிரவீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நெல்லிக்குப்பம்: கடலூரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நெல்லிக்குப்பம் பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் பாதுகாப்பு முகாம்களில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கு தங்கியிருந்த மக்களுக்கு 5 கிலோ அரிசி,

வேட்டி, சேலை, போர்வை, உணவு பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கினார். பின்னர் மதிய உணவு வழங்கினார். ஆய்வின்போது அண்ணா கிராம ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகசுந்தரி, பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் மணிவண்ணன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், பலராமன், நகராட்சி ஆணையர் கிருஷ்ணராஜன், தலைமை கழக பேச்சாளர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post புயல் கடந்த நிலையிலும் வெள்ளத்தில் தத்தளிப்பு; பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருட்களுடன் நிவாரண உதவி: கடலூரில் துணை முதல்வர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Cuddalore ,Deputy ,Chief Minister ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத...