×

புதுச்சேரியில் 5 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் பெஞ்சல் புயல் மற்றும் வரலாறு காணாத மழையால் 35 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 2.80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 30 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். புதுவை முழுவதும் உள்ள 208 முகாம்களில் 15 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் மட்டும் நெற்பயிர், வாழை, மணிலா, காய்கறி என 5,527 ஹெக்டேர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பிணமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் சிலர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்கள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. 361 பேர் வெள்ளத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர்.

கனமழைக்கு 5 பசு மாடுகள், ஒரு எருமை மாடு, 29 கன்றுகள், 8 ஆடுகள் இறந்துள்ளது. கோழி, வாத்து உள்ளிட்ட 5 ஆயிரம் பறவைகள் இறந்துள்ளன. 500க்கும் மேற்பட்ட மரங்களும், 400 மின் கம்பங்களும், 55 படகுகளும் சேதமாகி உள்ளது. 27 வீடுகள் முழுமையாகவும், 10 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 200 குடிசை வீடுகள் இடிந்துள்ளது. 4 மாட்டு கொட்டகைகளும் சேதமடைந்தது. இதுதவிர 12 பள்ளி கட்டிடங்கள், 4 கல்லூரி கட்டிடங்கள், 9 ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் சேதமாகி உள்ளன. சாலை, மேம்பாலம் உட்பட்ட ₹100 கோடிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் சேதமாகி உள்ளது.

The post புதுச்சேரியில் 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Bengal Storm ,Nuduwa ,
× RELATED பெங்கல் புயலால் தொடர் மழை; பழநி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு