×

திருப்பரங்குன்றம் அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் மோதல்

மதுரை: திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நத்தம் விஸ்வநாதன், செம்மலை முன்னிலையில் அதிமுகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மோதல் நடந்துள்ளது. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளர்கள், மாவட்ட துணை செயலாளரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலையில் மதுரையில் நடந்த அதிமுக கூட்டத்தில் மோதல் வெடித்த நிலையில் மாலையில் திருப்பரங்குன்றம் கூட்டத்தில் அடிதடி ஏற்பட்டுள்ளது. மோதலை தொடர்ந்து நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியேறினர். ஏற்கனவே கன்னியாகுமரி, |நெல்லை, கும்பகோணத்தில் நடந்த கள ஆய்வுக் கூட்டத்திலும் மோதல் வெடித்தது.

 

The post திருப்பரங்குன்றம் அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் மோதல் appeared first on Dinakaran.

Tags : Thiruparangunram Adimuka Field Study Meeting ,Madurai ,Thiruparangundaram ,Natham Viswanathan ,Chemmalai ,M. ,Rajan Selappa ,District ,Thiruparanguram Adimuka Field Study Meeting ,Dinakaran ,
× RELATED சோழவந்தானில் விபத்துகளை தடுக்க என்ன நடவடிக்கை?: ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி