- லண்டன்
- அண்ணாமலை…
- சீமான்
- காங்கேயம்
- நாதம் தமிழர் கட்சி
- காங்கயம், திருப்பூர் மாவட்டம்
- யூனியன் அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அண்ணாமலை
- சீமன்
காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் நாம் தமிழர் கட்சியின் கட்சி மறு சீரமைப்பு கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர், சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்திற்கான நிதியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. அப்படியெனில் எதற்கு வரி கட்ட வேண்டும். ஒன்றிய அரசுக்கான நிதி எங்கிருந்து வருகிறது. மாநில அரசுகள் தானே கொடுக்கின்றன. தமிழகம் மட்டும் ஏன் நிதி கொடுக்க வேண்டும், தர முடியாது என்று சொன்னால் என்ன செய்வார்கள். குஜராத் மீனவனை பாகிஸ்தான் கடற்படை கைது செய்தால், இந்திய கடற்படை மீட்டு வருகிறது. ஆனால், தமிழக மீனவர்களை மீட்பதில் கூட ஒன்றிய அரசு பாரபட்சமாக உள்ளது. அண்ணாமலை லண்டன் சென்று வந்ததும் அவர் பேச்சில் முதிர்ச்சி, நிதானம் உள்ளது. தவெக தலைவர் விஜய் மழை வெள்ளம் பாதித்த இடங்களுக்கு சென்று நிற்க முடியாது, அவர் நின்றால் அவரை பார்க்க கூட்டம் கூடிவிடும். விஜய் நிவாரணம் கொடுப்பதை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post லண்டனும்…அண்ணாமலையும்… சீமான் கருத்து appeared first on Dinakaran.