×
Saravana Stores

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… இன்று இரவில் இருந்து கனமழைக்கு வாய்ப்பு : டெல்டா மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

டெல்லி : வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு, நகரும் பாதையில் சற்று மாற்றம் ஏற்பட்டு வடமேற்கு திசையில், தமிழ்நாடு – இலங்கை கடலோரத்தை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு முதல் கனமழை பெய்யும் என்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் இன்று கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதே போல், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

The post வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… இன்று இரவில் இருந்து கனமழைக்கு வாய்ப்பு : டெல்டா மாவட்டங்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : BANGLADESH ,DELTA DISTRICTS ,Delhi ,Indian Meteorological Survey ,IMC ,Indian Ocean ,Dinakaran ,
× RELATED முதன்முறையாக கராச்சியில் இருந்து...