ஜெட்டா: 18வது சீசன்ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று நடந்தது. மொத்தமாக 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் 72 வீரர்கள் மொத்தமாக 467 கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
முதல் நாள் ஏலத்தில் அதிகபட்சமாக ரிஷப் பன்ட்டை 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி வாங்கியது. ஸ்ரேயாசை ரூ.26 கோடியே 50 லட்சத்திற்கு பஞ்சாப் எடுத்தது. தமிழக வீரர் அஸ்வின் 10 ஆண்டுக்கு பின் சிஎஸ்கே அணிக்கு திரும்பிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக 505 வீரர்களுக்கான ஐபிஎல் ஏலம் இன்று தொடர்கிறது.
இன்றைய ஏலத்தில் உணவு இடைவேளைக்கு முன்னதான ரூ.10.75 கோடிக்கு புவனேஷ்வர் குமாரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலம் எடுத்துள்ளது. புவனேஷ்வர் குமாரை ஏலம் எடுக்க மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினர் கடுமையாக போட்டியிட்டனர்.
- சுபம் துபே-வை ரூ.80 லட்சத்திற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
- ஸ்வஸ்திக் சிகாரா, மாதவ் கௌசிக், புக்ராஜ் மான், மயங்க் தாகர் அகிய வீரர்கள் இந்த ஐபிஎல் ஏலத்தில் விற்க்கப்படவில்லை
- அன்ஷுல் கம்போஜ்-ஐ ரூ.3.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ்அணி ஏலம் எடுத்துள்ளது.
- அர்ஷத் கான்-ஐ ரூ.1.30 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
- தர்ஷன் நல்கண்டேவை டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ.30 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது.
- ஸ்வப்னில் சிங்-ஐ ரூ.50 லட்சத்திற்கு RTM-ஐ பயன்படுத்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தக்கவைத்தது
- ரூ.1.30 கோடிக்கு குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் குர்னூர் ப்ரார்
- ரூ.30 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ்யால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் முகேஷ்செளத்ரி
- ஜீஷன் அன்சாரி-ஐ ரூ.40 லட்சத்திற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலம் எடுத்துள்ளது.
The post ஐபிஎல் மெகா ஏலம் 2-ம் நாள்: ரூ.10.75 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் புவனேஷ்வர் குமார்! appeared first on Dinakaran.