×
Saravana Stores

நாடாளுமன்றம் கூடும்முன் எதிர்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி.. ஆக்கப்பூர்வ விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தல்!!

டெல்லி: குளிர்கால கூட்டத்தொடரில் ஆரோக்கியமான விவாதங்களை உறுப்பினர்கள் முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் டிசம்பர் 20ம் தேதி வரை நாடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை ஒன்றிய அரசு நடத்தியது. இதில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜெய்ராம் ரமேஷ், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்கின்றனர்.

அதானி மீதான லஞ்ச புகார், மணிப்பூர் வன்முறை, ரயில் விபத்துகள், டெல்லி காற்று மாசு உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சற்றுநேரத்தில் தொடங்க உள்ளதை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது; இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டதன் 75-வது ஆண்டு விழாவை நாளை கொண்டாடுகிறோம். குளிர்கால கூட்டத்தொடரில் ஆரோக்கியமான விவாதங்களை உறுப்பினர்கள் முன்னெடுக்க வேண்டும். நாடாளுமன்ற விவாதங்களில் அதிக அளவில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும். மோசமான கட்சிகளை மக்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் விவாதம் தடைபடுவதால் இளம் எம்.பி.க்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் அரசியலுக்காக நாடாளுமன்றத்தை முடக்குகின்றனர். சில கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி தங்கள் வசம் ஆக்க பார்க்கின்றனர். மக்களுக்காக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் என்றும் குரல் கொடுத்ததே இல்லை என பிரதமர் கூறினார்.

The post நாடாளுமன்றம் கூடும்முன் எதிர்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி.. ஆக்கப்பூர்வ விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Parliament ,Delhi ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…