×
Saravana Stores

ஜார்க்கண்டில் அனைத்து தடைகளையும் கடந்து ஹேமந்த் சோரன் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு: ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்து தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் வாழ்த்துகள். அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளைக் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ. உருவாக்கினாலும் – அத்தனையையும் துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்த்து நின்று ஹேமந்த் சோரன் வென்றுள்ளார். அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அவரது தலைமையில் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இது மக்களாட்சிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post ஜார்க்கண்டில் அனைத்து தடைகளையும் கடந்து ஹேமந்த் சோரன் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Hemant Soran ,Jharkhand ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,DMK President ,Tamil Nadu ,M.K.Stalin ,India ,
× RELATED சொல்லிட்டாங்க…