×

வைகை கழிவுநீர் – 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

மதுரை: வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரிய வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் பதில்தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி மதுரை வழக்கறிஞர் மணிபாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவில்; வைகை வருசநாட்டில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் வழியாக கடலில் கலக்கிறது. தேனி, மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் கழிவுநீர் கலக்கிறது; மழைநீர் வடிகால் அனைத்தும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டன. ஆற்றின் நிலையை கருத்தில் கொண்டு தேனி முதல் ராமநாதபுரம் வரை கழிவுநீர் கலப்பதை தடுக்க சிறப்பு குழு தேவை என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசின் நீர்வளத்துறை, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்கள் பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post வைகை கழிவுநீர் – 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vaigai ,District Collectors ,Madurai ,Court ,Manibharathi ,Vaigai River ,Vaigai Sewage ,Dinakaran ,
× RELATED வைகையில் கழிவுநீர் தடுக்க சிசிடிவி...