×

இயக்குனர் எஸ்.டி.சபா திடீர் மரணம்

சென்னை: எஸ்.டி.சபா என்றும், சபா கைலாஷ் என்றும் அறியப்படும் சபாபதி தட்சிணாமூர்த்தி (61), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். விஜயகாந்த் நடித்த ‘பரதன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பிறகு பிரசாந்த் நடித்த ‘எங்க தம்பி’, லிவிங்ஸ்டன் நடித்த ‘சுந்தர புருஷன்’, பிரபுதேவா நடித்த ‘வி.ஐ.பி’, நந்தா நடித்த ‘புன்னகை பூவே’, ஜெய்வர்மா நடித்த ‘நாம்’, பிரபு நடித்த ‘அ ஆ இ ஈ’, மதுஷாலினி நடித்த ‘பதினாறு’ ஆகிய தமிழ்ப் படங்களை இயக்கினார். தெலுங்கில் ஜெகபதி பாபு நடித்த ‘பந்தெம்’, கன்னடத்தில் ‘ஜாலி பாய்’ ஆகிய படங்களை இயக்கினார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post இயக்குனர் எஸ்.டி.சபா திடீர் மரணம் appeared first on Dinakaran.

Tags : S.T. Saba ,Chennai ,Sabapathi Dakshinamoorthy ,Saba Kailash ,Vijayakanth ,Prashanth ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...