×

வேதாரண்யம் பகுதி விநாயகர் ஆலயங்களில் சங்கடஹர சதுர்த்தி விழா

 

வேதாரண்யம், நவ.22: வேதாரண்யம் பகுதி விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.வேதாரண்யம் நகரம் மாரியம்மன்கோவில் தெரு ஆரம்பத்தில் அமைந்துள்ள அச்சம் தீா்த்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்த பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.இதே போல் வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள கற்பகவிநாயகர், கட்சுவான் முனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர், தோப்புத்துறை வரம் தரும் விநாயகமூர்த்தி, ராமருக்கு இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் விநாயகர், சேதுசாலை அரசமரத்தடி சித்தி விநாயகர், மண்டலகுளம் சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டு மடம் மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், நாகை சாலை மருத மரத்து விநாயகர், ஞான விநாயகர், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வெகு சிறப்பாக நடந்தது. ஆங்காங்கே ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டனர்.

The post வேதாரண்யம் பகுதி விநாயகர் ஆலயங்களில் சங்கடஹர சதுர்த்தி விழா appeared first on Dinakaran.

Tags : Sangadahara Chaturthi festival ,Vinayagar ,Vedaranyam ,Sangadahara Chaturthi ,Ganesha ,Mariammankoil Street ,
× RELATED கந்தர்வகோட்டை ராஜ கணபதி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு