தண்டையார்பேட்டை, டிச.19: பூக்கடை ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி ஆலயத்திற்கு சொந்தமான தையப்பன் தெருவில் உள்ள 243 சதுரஅடி இடம் வணிக பயன்பாட்டிற்காக 1978ம் ஆண்டு மாங்கிலால் என்பவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் குத்தகைக்கு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து அதனை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல் மாங்கிலாலின் மகன்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதுகுறித்து பலமுறை கோயில் நிர்வாகம் சார்பில் கூறியும் நோட்டீஸ் வழங்கியும் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தனர். எனவே நேற்று முன்தினம் இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல உதவி ஆணையர் சிவக்குமார் தலைமையில் ஆலய நிலங்கள் மீட்பு தாசில்தார், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் ஏழுகிணறு போலீசார் உதவியுடன் அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர். தற்போது அந்த இடத்தின் மதிப்பு 7 லட்சம் ரூபாய் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பூக்கடையில் 243 சதுரஅடி கோயில் நிலம் மீட்பு appeared first on Dinakaran.