×

போக்சோ வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை

தூத்துக்குடி,டிச.19: போக்சோ வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது. தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ரத்தினம் மகன் குமார் (எ) ஷியாம்குமார் (30) என்பவரை வை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை நீதிபதி சுரேஷ் விசாரித்தார். அவர், குற்றவாளியான குமார் (எ) ஷியாம்குமாருக்கு 4 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

The post போக்சோ வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : POCSO ,Thoothukudi ,Vaikuntam All Women ,Police Station ,Thoothukudi district ,Dinakaran ,
× RELATED தொடர் மழையால் ஆர்.கே.பேட்டையில் நெல் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்