×

பெண் போலீசை பலாத்காரம் செய்த எஸ்ஐ கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் தொலை தொடர்புத்துறை சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் வில்பர் பிரான்சிஸ். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே போலீஸ் தலைமை அலுவலகத்தில் சைபர் குற்றப்பிரிவில் பணிபுரிந்து வரும் ஒரு பெண் போலீசுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து அவரை வில்பர் பிரான்சிஸ் தனது காரில் வீட்டில் கொண்டு விட்டார். அப்போது வீட்டில் வைத்து பெண் போலீசை வில்பர் பிரான்சிஸ் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் வில்பர் பிரான்சிசை கைது செய்தனர்.

The post பெண் போலீசை பலாத்காரம் செய்த எஸ்ஐ கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Wilbur Francis ,SI ,
× RELATED நடிகை பலாத்கார வழக்கில் நடிகர்கள்...