×
Saravana Stores

வல்லநாடு திருமூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை

செய்துங்கநல்லூர், நவ. 21: வல்லநாடு ஆவுடையம்பாள் சமேத திருமூலநாத சுவாமி கோயில் பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் கட்டப்பட்டது. இக்கோயிலில் மூலவர் சுயம்புலிங்கமாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார். கும்பாபிஷேகம் நடந்து 100 ஆண்டுகளை நெருங்கியுள்ளது. பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அரசு சார்பில் ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே பழமையான கொடிமரம் சேதமடைந்திருந்ததால் உபயதாரர் நிதி மூலம் ரூ.9.70 லட்சம் செலவில் 43 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா அறநிலையத்துறை ஆணையர் தர் உத்தரவுப்படி, இணை ஆணையர் அன்புமணி அறிவுறுத்தலின் பேரில் உதவி ஆணையர் செல்வி முன்னிலையில் கோயிலில் நடந்தது.

விழாவில் அறநிலையத்துறை செயற்பொறியாளர் சுந்தர், கோயில் தக்கார் நம்பி, நகை சரிபார்ப்பு அலுவலர் செந்தில்குமார், கோயில் கணக்கர் விஸ்வநாதன், ஸ்தபதிகள் ராஜூ, அருண்ராஜா மற்றும் பேட்டை ஐயப்பன் ஆகியோர் கொடிமரம் பிரதிஷ்டை செய்தனர். நேற்று மழை பெய்த போதிலும் கொடிமரம் பிரதிஷ்டை குறித்த நேரத்தில் நடந்தது. கொடிமர பிரதிஷ்டை பூஜைகளை அர்ச்சகர்கள் சண்முகசுந்தரபட்டர், சந்தோஷ்பட்டர், ஹரிபட்டர் ஆகியோர் செய்தனர். ஏற்பாடுகளை திருமூலநாத சுவாமி பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்.

The post வல்லநாடு திருமூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை appeared first on Dinakaran.

Tags : Thirumulanatha Swamy Temple ,Vallanadu ,Karadanganallur ,Vallanadu Aaudaimpal ,Sametha ,Pandya ,Moolav ,Kumbabhishekam ,Vallannadu Thirumulanatha Swamy Temple ,
× RELATED வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு