×
Saravana Stores

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேசிய பாஜ தலைமையே முடிவு செய்யும்: எச்.ராஜா பேட்டி

சென்னை: தமிழக பாஜவின் மையக்குழு கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, தமிழக பாஜ ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா தலைமை வகித்தார். பாஜ மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பாஜ கிளை தேர்தலை வரும் 30ம்தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு, நகர, ஒன்றிய, மாவட்ட தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறும். அதை தொடர்ந்து, ஜனவரியில் மாநில தலைவர், தேசிய தலைவர் தேர்தல் நடத்தப்படும். கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சிபிஐ விசாரிக்க உள்ளது வரவேற்கத்தக்கது. வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமையே முடிவு செய்யும் என்றார்.

The post சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேசிய பாஜ தலைமையே முடிவு செய்யும்: எச்.ராஜா பேட்டி appeared first on Dinakaran.

Tags : National BJP ,H. Raja ,Chennai ,Tamil Nadu ,BJP ,Kamalalayam ,D. Nagar, Chennai ,Tamil Nadu BJP Coordination Committee ,President ,Pon. Radhakrishnan ,Tamilisai Soundararajan ,Vanathi Srinivasan ,Nayanar Nagendran ,Dinakaran ,
× RELATED குற்றவாளி எச்.ராஜாவுக்கு எதிரான 2...