×
Saravana Stores

இந்தியா- ஆஸி. மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர்: நாளை மறுநாள் தொடங்குகிறது


பெர்த்: பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், நாளை மறுநாள் தொடங்குகிறது. அதற்கான தயார் நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன. முதலில் நடைபெறும் பெர்த் டெஸ்ட்வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளமே தயாராகி இருப்பதாக தெரிகிறது. அதனால் அதை மையமாக வைத்தே வேகப்பந்து வீச்சாளர்களும், பேட்ஸ்மேனும் இந்திய அணியின் தேர்வாக உள்ளது. அணியின் கேப்டனும், தொடக்க வீரர்களில் ஒருவருமான ரோஹித் சர்மா, முதல் போட்டியில் விளையாடாத நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து, கே.எல்.ராகுல் இன்னிங்ஸை தொடங்க இருக்கிறார். அணியினருக்குள்ளேயே நடந்த பயிற்சி ஆட்டத்தில் காயம் காரணமாக அவர் களம் இறங்குவது சந்தேகம் என தெரிகிறது. 3வது வீரர் ஷுப்மன் கில், ஃபீல்டிங்கின்போது காயமடைந்தது இந்திய அணி எதிர்பாராத ஒன்றாகும்.

எனினும் இந்திய ‘ஏ’ அணியுடன் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள தேவ்தத் படிக்கல் களம் இறங்க வாய்ப்புள்ளது. நட்சத்திர வீரரான விராட் கோஹ்லி 4ம் இடத்திலும், அதிரடியாக விளையாடும் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் 5வது இடத்திலும் நம்பிக்கையாக இருக்கின்றனர். 6வது இடத்துக்காக, துருவ் ஜுரெல், சா்ஃப்ராஸ் கான் இடையே போட்டி உள்ளது. இருவருமே நன்றாகவே ஆடினாலும் ஜுரெலுக்கான வாய்ப்பு அதிகம் என தெரிகிறது. பவுலிங் ஆல்-ரவுண்டர்களில் நிதீஷ்குமார் ரெட்டி, ரவிச்சந்திரன் அஸ்வின் எதிர்பார்க்கப்படும் நிலையில், பயிற்சியின்போது ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சை விட, பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தினார். கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் ஜஸ்பிரீத் பும்ரா, வேகப்பந்து வீச்சுக்கு பிரதானமாக இருக்க, அவருக்கு உறுதுணையாக முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா இடையே போட்டி உள்ளது.

இதில் யாருக்கு வாய்ப்பு என்பது பயிற்சியின்போதுதான் தெரியவரும். இந்த டெஸ்ட் தொடரில் எதிர்கொள்வதற்கு கடினமான பவுலர் பும்ரா. எப்போதும் நெருப்பு போன்ற ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தும் விராட் கோலி, சமீப காலத்தில் தடுமாறுகிறார். இதுபோன்ற தருணத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் கோஹ்லியை சீண்ட கூடாது. அப்படி செய்தால், அதுவே அவரை அந்த நெருப்பை மீண்டும் தீவிரமடைய செய்து, கோஹ்லி சிறந்த இன்னிங்ஸை விளையாட காரணமாக அமைந்துவிடலாம். சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வி கண்ட பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியா வந்துள்ளது.

அந்த தோல்வி ஒருவேளை இந்தியாவின் நம்பிக்கையை சற்று தளரவிட்டிருக்கலாம். அதற்காக இந்திய அணியை குறைத்து மதிப்பிட மாட்டோம். உலகின் சிறந்த அணிகளில் இந்தியாவும் ஒன்று. அதன் வீரர்கள் வரிசையும், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறமை வாய்ந்ததாகவே உள்ளது. அணியிருக்கும் ஒவ்வொரு வீரரும் கடின உழைப்பின் மூலம், இந்திய அணியில் தங்களுக்கான இடத்தை தேடிக்கொண்டுள்ளனர். சிறந்த வீரராக இருந்தால் மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார்.

The post இந்தியா- ஆஸி. மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர்: நாளை மறுநாள் தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : India ,Aussie ,Kawasaki Cup Test Series ,Perth ,Border—Kawasaki Cup Test series ,Australia ,of ,Border ,Dinakaran ,
× RELATED ஆஸி. டெஸ்ட்: 2ம் நாள் முடிவில் இந்தியா 172 ரன்கள்