×

அயனாவரத்தில் பட்டப்பகலில் கணவன், மனைவிக்கு வெட்டு: சிசிடிவி வெளியாகி பரபரப்பு

பெரம்பூர்: அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலை பகுதியில் நேற்று மதியம் இளம்பெண் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஓட்டலில் சாப்பாடு வாங்கி வீட்டுக்கு செல்லும் நேரத்தில் திடீரென வந்த ஒருவர் வழிமறித்து பட்டா கத்தியை திருப்பி வைத்துக்கொண்டு சரமாரியாக அந்த இளைஞரை தாக்கினார். தடுக்க முயன்ற அந்த இளம்பெண்ணுக்கும் கையில் வெட்டு விழுந்தது. மேலும், உயிருக்கு பயந்து அவர்கள் ரத்தக்காயங்களுடன் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர தாக்குதலை நேரில் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், தம்பதியை மர்ம நபர்கள் வெட்டும் காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் ஏதும் தராமல் அங்கிருந்து சென்று விட்டனர். தொடர்ந்து அயனாவரம் போலீசார் குறிப்பிட்ட அந்த மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post அயனாவரத்தில் பட்டப்பகலில் கணவன், மனைவிக்கு வெட்டு: சிசிடிவி வெளியாகி பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Ayanavaram ,Perambur ,Ayanavaram Coonoor ,
× RELATED பணம் வைத்து சூதாட்டம் கிளப் உரிமையாளர் உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு